பா.ஜ.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை : எடப்பாடி பழனிசாமி பேட்டி 

0 81
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 12 பா.ஜ.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை : எடப்பாடி பழனிசாமி பேட்டி

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு பின்னர் பழைய மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பியூஸ்கோயல் மற்றும் எல் முருகன் ஆகியோர் சந்தித்து பேசி விட்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்…

பியூஷ் கோயல் இரண்டு முறை பேசியது தொகுதி பங்கீடு குறித்த என்ற கேள்விக்கு?

தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை தேர்தல் பணி குறித்து பேசினோம்

உங்களை அழைத்து என்ன என்ன தொகுதி என கூறிவிடுவோம்

முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என கூறுகிறார் ஆனால் பிரதமர் ஒவ்வொரு முறை வரும்போது வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை கொடுக்கிறார், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்துள்ளார்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தர உயர்த்தி உள்ளார். இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறியுள்ளார்

தவெகவிடம் கூட்டணி குறித்து பேசுகிறீராக என்ற கேள்விக்கு ?

தவெக விடம் கூட்டணி குறித்து பேசவில்லை நீங்கள் தான் பரப்பி கொண்டு இருக்கிறீர்கள் நீங்களாக கற்பனை செய்து கேட்டால் நாங்கள் என்ன செய்வோம் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை

விஜய்க்கு சிபிஐ நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு?

இது outoff அவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்க்கப் போகிறார்கள் எல்லோரும் மேலும் வழக்குக்குள்ளது எங்கள் மேலும் வழக்கு உள்ளது நாங்கள் எதிர்த்து நீதிமன்றம் செல்கிறோம் இதை தனிப்பட்ட முறையில் கேட்டால் ஒன்றுமில்லை இதை அவர்கள் இடம் தான் கட்ட வேண்டும்

எப்படி மறைமுகமாக நேரடியாக அழுத்தம் தரமுடியும் வழக்கு என்றால் வழக்கு தான்

இந்த தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தேர்தல் என முதல்வர் பேசுகிறார் என்ற கேள்விக்கு?

அப்படி என்றால் முதலமைச்சருக்கு நிம்மதி இல்லை என்று அர்த்தம் துரதிஷ்டவசமாக அவருக்கு ஆட்சி கையில் கிடைத்துள்ளது வரவுள்ள தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அதிமுக பிரதான எதிர்க்கட்சி அவர் டெல்லி என்று சொல்ல வாய்ப்பு இல்லை அண்ணா திமுக ஆட்சி பொற்கால ஆட்சி யை நாங்கள் கொடுத்தோம் எங்கள் மீது விமர்சனம் செய்ய முடியாததால் அவர் அப்படி கூறுகிறார் எங்களை எதிர்த்து நேரடியாக மோத முடியாத காரணத்தால் இதெல்லாம் பேசிக் கொண்டுள்ளார்

அடுத்த கட்ட தேர்தல் அறிக்கை எப்பொழுது வெளியிடுவீர்கள் என்ற கேள்விக்கு?சொல்கிறேன் என கூறினார்

அதிமுக தொண்டர்கள் நினைத்தால் பரிதாபமாக உள்ளது என்ற கேள்விக்கு?

அவரை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது என கூறினார் அவருக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசாக உள்ளது

20 நாட்களாக காங்கிரசும் திமுகவும் போராடிக் கொண்டது அதை எந்த பத்திரிக்கையாவது போட்டீர்களா

கெஞ்சினாலும் பொருந்தாத கட்சி தற்பொழுது காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது

கேவலமாக மாத்தி மாத்தி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர் இது குறித்து எந்த விவாதமும் நீங்கள் செய்யவில்லை அதிமுக தும்மினால் போதும் விவாத மேடை வைக்கிறீர்கள் என கூறினார்

அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது எங்களது கூட்டணி வெற்றி பெறும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.