எலி பேஸ்ட்யை சாப்பிட்டு திருச்சி வாலிபர் தற்கொலை!

0 824
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா இவரது மகன் சேட் முகமது. இவர் ஐடிஐ முடித்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் திருச்சிக்கு திரும்பினார்.

இவர் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த ஐந்தாம் தேதி எலியை பிடிக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை மற்றும் தூக்கமாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனை அறிந்த தந்தை அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.