பொன்மலை ரயில்வே பணிமனையில் தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஸ் வாக்கு சேகரித்தார்

0 40
Stalin trichy visit

திருச்சி, ஏப்.6  திருச்சி திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று காலை பொன்மலை ரயில்வே பணிமனைக்கு பணிக்குச் சென்ற தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பணிமனை நுழைவாயிலில் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி ஆதரவு கோரினார். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில்வே துறையின் முக்கியத்துவம் குறித்து உரையாடினார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட நிர்வாகிகள் திமுக: மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், , பகுதிச் செயலாளர் தர்மராஜ், வட்டச் செயலாளர் வரதராஜன்.
தொழிற்சங்கங்கள்: SRMU நிர்வாகிகள் வீரசேகரன், முருகானந்தம், விஜயகுமார், முகேஷ், ரமேஷ் மற்றும் ரயில்வே தொமுச நிர்வாகிகள். கூட்டணி கட்சிகள்: தேமுதிக பொருளாளர் மில்டன் குமார், பிரித்தா, பகுதிச் செயலாளர் அருள்ராஜ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.