வீட்டில் இருந்தே தபால் வாக்கு பதிவு செய்வதற்கான வசதிகள் : வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருச்சி, ஏப்.8 திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வீட்டில் இருந்தே தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நுண்பார்வையாளர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்.பாலாஜி(மாவட்ட வருவாய் அலுவலர்), கோ.செந்தில்குமாரி(டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்), சி.முத்துமாரி (மாவட்ட வருவாய் அலுவலர், ஆவின்) நுண் பார்வையாளர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர், உதவி வாக்குப்பதிவு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.