திருச்சிராப்பள்ளி வீடு கூட்டுறவு கட்டுமான சங்கத்தின் செயலாளராக இருந்தவர் கார்மேகம். இவர் கடந்த 2016ம் ஆண்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள இடத்தினை பழைய உறுப்பினர் என பொய்யாக பதிவு செய்து சதுர அடி 150 ரூபாய் என ஏழு ஃப்ளாட்டாக மாற்றி விற்பனை செய்துள்ளனர்.

ஆனால் அந்த இடத்தின் அன்றைய அரசு மதிப்பு 3000 ரூபாய், இந்த நிலையில் பொய்யாக பதிவு செய்து 6 கோடியே 55 லட்சம் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் திருச்சி கருமண்டபம் பகுதி செல்வா நகரில் கூட்டுறவு வீடு கட்டுமான சங்க செயலாளர் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் இன்று ஈடுபட்டனர்.
திருச்சி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்மேகம் வீட்டில் 45 சவரன் நகைகள், பத்திரங்கள், 18 லட்சம் மதிப்புள்ள கார், 2 லட்சத்து 20 ஆயிரம் பணம் வங்கி லாக்கரில் உள்ள 150 சவரன் நகைகள் என ரைடில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo