இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் வக்கீல் புகார்

0 550
Stalin trichy visit

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் திருச்சி கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த வக்கீல் தங்கவிக்ரம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் திருச்சி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு பொன்மலை சேர்ந்த எனது கட்சிக்காரர் சார்பில் பொன்மலை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஆஜரானேன். அப்போது எனது கட்சிக்காரர் மீது ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள புகார் தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் உள்ளதால் நாங்கள் நீதி மன்றம் மூலமாகவே தீர்வு காண விரும்புகிறோம் என கூறி விட்டோம்.

இந்த நிலையில் ரெயில் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் நான் போலி வக்கீல் என்றும், என்னை விசாரிக்க வேண்டும் என்றும் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த பிரச்சனையில் என் மீது பொய்யான புகார் அளிக்க பொன்மலை இன்ஸ்பெக்டர் தூண்டியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.