ரூ.20.42 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

0 503
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை சேர்ந்த பிரதீப் குமார்(24) என்ற பயணி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான்(48) என்ற பயணியிடம் இருந்தும் சட்டையில் பேஸ்ட் வடிவில் மறைத்து ரூ.20.42 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.