ஆம்புலன்ஸ் உரிமையாளரின் நேர்மையை பாராட்டிய பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் துறையூரில் வசித்து வருபவர் நடராஜன்(36). இவர் பெரியகடை வீதியில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்பொழுது இவருக்கு முன்பாக அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி பணம் எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்தப் பெண்மணி வெளியே வந்த பின்பு மீண்டும் நடராஜன் பணம் எடுக்க உள்ளே சென்றார். அப்போது ஏடிஎம் கார்டை உள்ளே சொருகும் முன்பு ரூ.2000 வெளியே வந்தது.
இதையடுத்து முன்பு பணம் எடுக்க முயற்சித்த பெண்மணி பணம் வரவில்லை என்று சென்றிருப்பது தெரியவந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் அந்த பெண்மணியை தேடினார். பெண்மணியை காணவில்லை. உடனடியாக அருகில் உள்ள கடைகளில் தனது செல்போன் நம்பரை கொடுத்து சென்றார்.
காலையிலிருந்து மாலை வரை யாரும் தொடர்பு கொள்ளாததால் மாலை திருச்சி ரோட்டில் உள்ள ஆக்சிஸ் பேங்க் மேலாளரிடம் சென்று ரூ.2000 பணத்தை ஒப்படைத்தார். ஆம்புலன்ஸ் உரிமையாளரின் நேர்மையை பாராட்டி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.