திருச்சி மேல அல்லூர் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி. இவர் அப்பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஜீயபுரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் தத்தளித்த துளசிமணியை மீட்டனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.