போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது
திருச்சி ஜூன் 15 திருச்சி இபி ரோடு லூர்து சாமி பிள்ளை பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது திருச்சி கீழ சிந்தாமணி வென்னிஸ் தெருவை சேர்ந்த அபிஷேக் (வயது 23) என தெரியவந்தது.
பின்னர் போலீசார் அபிஷேக்கை கைது செய்து அவரிடம் இருந்து போதை மாத்திரை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.