கோழிக்கோட்டில் நடைபெற்ற தமிழ் சங்கத்தின் 67 ஆம் ஆண்டு நிறைவு விழா : சிறுகதைகள் நூல் அறிமுகம்

0 11
Stalin trichy visit

தமிழ் சங்கத்தின் 67 ஆம் ஆண்டு நிறைவு விழா. சிறுகதைகள் நூல் அறிமுகம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் ஊராட்சியை சேர்ந்தவர் குணா. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் கவிதை சிறுகதைகள் எழுதி வருகிறார். கோழிக்கோட்டில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் 67 ம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று சிறுகதைகள் நூல் அறிமுகம் நடைபெற்றது.

கேரள மாநிலம் கோழிக்கோடு தாலுக்கா கள்ளிக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மஹாலில் கோழிக்கோடு தமிழ் சங்கத்தின் 67 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் ஊராட்சியைச் சேர்ந்த வாழையூர்குணா அவர்கள் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிட் பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைகள் நூலை அறிமுகம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.