20 மூட்டை ரேஷன்‌ அரிசிகள் பறிமுதல்

0 536
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாந்தம் என்ற பகுதியை சேர்ந்தவர் செல்வம்(41). கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் காலியிடத்தில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மூட்டைகளில் ரேஷன் அரிசிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்த 20 மூட்டை ரேஷன்‌ அரிசியை பறிமுதல் செய்ததோடு அங்கு யார்? வைத்ததுச் சென்றார்கள் என்றும், எதற்காக வைக்கப்பட்டது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.