ஏ.வி.எஸ். பவளவிழா கோப்பைக்கான 2-வது கிரிக்கெட் போட்டி; இன்று நிறைவுபெறுகிறது

0 498
Stalin trichy visit

ஆறுநாட்டு வேளாளர் சங்க இளைஞரணி நேருநினைவுக்கல்லூரி, திருச்சி சிதம் ஸ்போர்ட்ஸ் பிரியங்கா கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆகியோர் இணைந்து நடத்தும் ஏ.வி.எஸ். பவளவிழா கோப்பைக்கான 2-வது கிரிக்கெட் போட்டி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

16 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் ரூ.65 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும். 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் சதீஸ்வரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜ், துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.