கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மார்க் ஊழியர்கள் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 15 திருச்சி – டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகம் முன் மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி – டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரையன் தலைமை வகித்தார்.
இதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் தீர்மானிக்க வேண்டும் காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். காலி பாட்டில் திரும்ப பெரும் பத்து ரூபாய் திட்டத்தை ஊழியர்களிடம் திணிக்க கூடாது எனவும் அதற்கு பதிலாக மாற்றுத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அரசு ஊழியர்களைப் போல ஓய்வு பெறும் வயதை 60 ஆகவும் இ எஸ் ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மேலும் டாஸ்மார்க் விற்பனையை முறைப்படுத்தி காசாளர் அறை மற்றும் விற்பனை அறை உட்பட அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் கலந்து கொண்டனர்