பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு காரில் தப்பிய மர்மநபர்கள்
திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம், குணசீ லம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி பவானி (வயது 48). இவர் குணசீலம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் இரவு பவானி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு நடந்துசென றார். அப்போது 2 மர்ம நபர் கள் பவானியின் வாயை பொத்தி, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை பறித்தனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மர்ம நபர்கள் காரில் ஏறி தப் பிச்சென்றனர். இது குறித்து வாத்தலை போலீசார் வழக் குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்ளை வலைவீசி தேடி வருகின்றனர்.