750 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

0 631
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சோதனைசாவடி எண் 2-ல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேன் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். வேனில் 750 கிலோ எடை கொண்ட 18 மூட்டைகள் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், வேனில் வந்த அரியமங்கலத்தை சேர்ந்த அக்பர்அலி(வயது 61), இ.பி.ரோடு தேவதானத்தை சேர்ந்த சுரேஷ்(32) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட ரேஷன் அரிசியை மலிவுவிலையில் வாங்கி வேனில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.