பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாநில தலைவர் சண்முகராஜா சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். 5000-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பி வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வழங்க வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்த மாநாட்டில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.