திருச்சி கேர் அகாடமியில் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான மாதிரி தேர்வு இணையவழியில் நடத்தப்பட உள்ளது. திருச்சி கேர் அகாடமி மைய இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்செல்வன் கூறியதாவது:-
கேர் அகாடமியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை ஆசிரியர் தேர்வினை நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தயாராகி வருகிறார்கள். தேர்வுக்கு சுய பரிசோதனை செய்து கொள்ள கேர் அகாடமி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வை போலவே மாதிரித்தேர்வினை நடத்துகிறது. 11 பாடங்களுக்கும் 2 அமர்வுகளாக நவம்பர் 8 மற்றும் 10-ந் தேதிகளில் 2 நாட்கள் தேர்வு நடத்தப்படுகிறது.
கட்டணமில்லா தேர்வாக நடத்தப்படும் இந்த தேர்வு ஆசிரியர்களை அரசு தேர்வுக்கு முழு அளவில் தயார்ப்படுத்திட உதவும். இதற்கான முன்பதிவு வரும் 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த இணையவழி முதுநிலை ஆசிரியர் மாதிரி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 30-ந் தேதியாகும்.
கேர் அகாடமியின் இணையதளமான www.carechemistry.com மூலம் ஆசிரியர்கள் மாதிரி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிந்தவுடன் விடைக்குறிப்புகள் விளக்கங்களுடன் வெளியிடப்படும். இதில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பங்கேற்பதால் தவறுகளை களைந்து முழு அளவில் தேர்வுக்கு தயாராக முடியும். கேர் அகாடமியில் அடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது எமது மையத்தில் ஓராண்டு நீட் பயிற்சி, டெட் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ஆகிய தேர்வுகளுக்கும் பயிற்சியை தொடங்கி உள்ளோம். இவர்களுக்கு விடுதி வசதியும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.