ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தூய்மை பணி மேற்கொண்ட சாரண-சாரணியர் இயக்கத்தினர்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக வைரஸ் தொற்று குறைந்ததால் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்தநிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது நீண்டநாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தூய்மைப்பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
திருச்சி சோமரசம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில், சாரண-சாரணியர் இயக்கத்தினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.