தடகள வீரருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு

0 302
Stalin trichy visit

தேசிய அளவில் டில்லியில் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் நடந்த தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றவரும், 16ம் தேதி சென்னையில் ஆண்களுக்கான மாநில தடகள போட்டில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்ற ஏ.சுவராஜை இன்று காலை திருச்சி ரெயில் நிலையத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கம், மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்சியாளர் சீனிவாசன், மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி.நீலமேகம், ஆர்.கே.ராஜா, பள்ளி பயிற்சியாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.