காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
திருச்சி ஆக 11 திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது59) இவர் காந்தி மார்க்கெட் 4-வது கேட் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 9 ந் தேதி அன்று இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றவர், நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியிலிருந்த ரூ16,500 பணம் திருடப்பட்டிருந்தது.
இது குறித்துகாந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து வரகனேரியைச் சேர்ந்த முகமது ஆசிப் (வயது27) மற்றும் கார்த்திக் (வயது19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ6,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.