காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

0 83
Stalin trichy visit

திருச்சி ஆக 11 ​திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது59) இவர் காந்தி மார்க்கெட் 4-வது கேட் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 9 ந் தேதி அன்று இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றவர், நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியிலிருந்த ரூ16,500 பணம் திருடப்பட்டிருந்தது.

​இது குறித்துகாந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து வரகனேரியைச் சேர்ந்த முகமது ஆசிப் (வயது27) மற்றும் கார்த்திக் (வயது19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ6,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.