திருச்சி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி DYFI அமைப்பினர் சார்பாக மனு!

0 538
Stalin trichy visit

திருச்சி மகாத்மா நினைவு அரசு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி DYFI சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையின் முதல்வரிடம் மனு கொடுத்துள்ளனர்


அதில்…”அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பயன்படுத்திடும் கழிவறைகள் சுத்தம் இன்றி தண்ணீர் வசதி, கதவு தாழ்பாள் உள்ளிட்டவைகள் சரிவர இல்லாது காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் மின் விசிறிகள் இயங்குவதில்லை, குடிநீர் இயந்திரங்கள் இயங்காமலும், சுடுநீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல நேரங்களில் மின் தூக்கிகளும் செயல்படாமல் உள்ளது என்றும்,
பெருச்சாலிகளின் புகலிடமாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக பிரசவ வார்டுகளில் அதிகமாக உள்ளது என்றும், சிலநேரங்களில் பெருச்சாலிகளின் தாக்குதலால் நோயாளிகளும் பதம் பார்க்கப்படுகிறார்கள் என்றும், நோயாளிகளிடம் கனிவாக அக்கறையுடன் மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நடந்து கொள்வதில்லை. அதேபோல் எந்த பணி செய்யவதாயினும் கையூட்டு கொடுத்தால் தான் பணி நடக்கும் சூழலும் பெருகி போயுள்ளதாகவும், மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், காலி பணியிடங்களில் ஊழியர்களை பணி நியமனம் செய்திடவும், ஒப்பந்த பணியாளர்களுக்கு முறையான உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை என்றும், “May I Help You’ Desk – ஐ மருத்துவமனையில் ஏற்படுத்தினால் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், படிப்பறிவில்லாத நபர்கள் போன்றவர்களுக்கு பயனாக இருக்கும்.மேலும், தற்பொழுது சிகிச்சைப் பிரிவுகள் பல முன்னறிவிப்பின்றி தொடர்ந்து இடம் மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பார்வை நேரம் 9 to 12 என்பதாலும் அதற்குள் மருத்துவரை அணுக வேண்டும் என்ற நிர்பந்தத்தாலும் செய்வதறியாது நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எந்தெந்த மருத்துவப் பிரிவு எங்கெங்கு உள்ளது என்பதைக் குறிக்கும் ஒரு அறிவிப்பு பலகை மருத்துவமனையில் இருப்பது நோயாளிகளுக்கு பெரும் பயனாக இருக்கும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற மக்களை அலைக்கழிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அரசு மருத்துவமனையில் பதிவு செய்து பழைய மாவட்ட ஆட்சியரகம் அருகிலுள்ள கருவூலத்தில் படிவம் பெற்று பிறகு எஸ்பிஐ தலைமை வங்கிக்கு சென்று பணம் செலுத்தி பெற வேண்டிய சூழல் உள்ளது இதனை ஒரே இடத்தில் பெறுவதற்கான நடைமுறையை சாத்தியப்படுத்த சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் தோழர் பால சந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர் கிச்சான், வாலிபர் சங்க நிர்வாகிகள் செந்தில், யுவராஜ், பாபுஜி, சோலை ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.