நார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து : பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

0 19
Stalin trichy visit

திருச்சி, செப். 4 திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே நார் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட் டியில் ஒருநார் கம்பெனி உள் ளது. திருச்சியைச் சேர்ந்த 2 பேர் இந்த கம்பெனியை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேங்காய் நார்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இந்த கம்பெனியில் அதை மதிப்பு கூட்டி பல்வேறு நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 1 ஏக்கர் பரப் பளவில் இயங்கி வரும் இந்த கம்பெனியில் 20-க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் சுமார் ஒருமணி அளவில் கம்பெனியின் உள்பகுதியில் இருந்து திடீரென புகை ர்  வந்தது. தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்த தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்டதீயணைப்பு நிலைய அலுவலர் வினோத்தலைமை யில் உதவி மாவட்ட அலுவ லர்லியோஜோசப், சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவ லர் மனோகரன், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாக னங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தொடர்ந்து தண் ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். 8 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப் பினர். தேங்காய் நார்கள், றும் கட்டி உபகரணங்கள் மற்றும்  உள்ளிட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட் கள் தீயில் எரிந்து நாசமாகின.

இந்த தீவிபத்தினால் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு புகை மண்டலமாக காட்சிய ளித்தது. அந்த வழியாக அடைந்தனர். சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  வெயிலின் தாக்கத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்க லாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் சத்தியபிரியா தலை மையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தினர். இந்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று பெரும் பரப ரப்பை ஏற்படுத் ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.