நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சி, செப். 4 நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 3 ம் நாளில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் மூன்றாம் நாளான செப்.4 ந்தேதி இன்று பல்லபுரத்தில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை கல்லூரி முதல்வர் R. லலிதா தலைமையேற்று, மாணவர் மன்ற ஆலோசகரான டாக்டர் அ. வள்ளியம்மை வாழ்த்துரை வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர்.இம் முகாமில் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கண் பரிசோதனை முகாம் நாட்டு நலப்பணித் திட்டம், டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் வேளாண்மைப் பொறியியல் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தினார்கள். Dr. கணபதி சுப்ரமணியன்-மேலாளர், தனபாலன்-ஒருங்கிணைப்பாளர் மற்றும் விழி பரிசோதகர்களான சீனிவாச பெருமாள், ஹெலன் மற்றும் செல்வா ஆகியோர் மூலம் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுநல மருத்துவ முகாம்
Dr. ஹரிஹரன் மருத்துவர் தலைமையில் பொதுநல பரிசோதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இறுதியாக வினோதினி நன்றி உரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
மருத்துவ முகாமிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு முகாம் நிறைவடைந்தது. இம்முகாமில் கண் பரிசோதனையில் 65 பேரும் பொது நல மருத்துவ முகாமில் 55 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.