தீபாவளி போனஸ் வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

0 414
Stalin trichy visit

தீபாவளி போனஸ் வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தீபாவளி பண்டிகை முன்பணம் போனஸ் வழங்கவும், ஓய்வூதியர்களுக்கு 72 மாத நிலுவைத் தொகை வழங்கிடவும்,14 சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனத்தின் பொது செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார், மாநில இணைச் செயலாளர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றி மாநில அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் 30-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த தீபாவளி போனஸ் அறிவித்தால் குடும்பத்துடன் சென்று கொண்டாட முடியாது சூழல் ஏற்படும் எனவே உடனே அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.