விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் : அமைச்சர் ரமேஷ் வழங்கினார்

0 16
Stalin trichy visit

திருச்சி, நவ.2  திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமேஷ் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கல்.

திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் தலைமையில், விவசாயிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள், பட்டாசுகள் அடங்கிய தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுடனும் அமர்ந்து அவர் மதிய உணவு அருந்தினார். இந்நிகழ்வில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில், விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அரசு மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நாம் ஒவ்வொரு வேளையும் உண்ணும் உணவில் விவசாயிகளின் உழைப்பு நிறைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும் நாங்களும் விவசாயிகளை எங்களது தாய் – தந்தையாகவே கருதுகிறோம். பண்டிகை காலங்களில் பெற்றோருக்கு செய்வதைப் போல, விவசாய பெருமக்களுக்கு அன்பின் வெளிப்பாடாக புத்தாடையும் இனிப்பும் வழங்க ஆசைப்பட்டோம். இதற்கு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் ஒப்புதல் பெற்று, இந்த நிகழ்வு தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நமக்கு உணவளித்து உடலுக்கும் உயிருக்கும் ஆதாரமாக இருக்கும் விவசாயிகளுக்கு, என் கையால் உணவு பரிமாற வேண்டும் என்ற நோக்கில் மதிய உணவு உபசரிப்பும் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும் மக்களுக்குமாக உழைக்கும் விவசாயிகளின் பேரன்பிற்கு நாம் என்றும் கைமாறு செய்ய முடியாது.
விவசாயிகளை பெருமைப்படுத்தவும், அவர்களை என்றும் வணங்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில்:-

எனது அனுபவத்தில் யாருமே விவசாயிகளை அழைத்து தீபாவளி பரிசு வழங்கியது இல்லை. இதுவே முதல்முறை. அரசியல்வாதிகள் அவர்கள் கட்சிக்காரர்களுக்கு வழங்குவார்கள். ஆனால் விவசாயிகள் 300 பேரை அழைத்து இன்று பரிசு பொருட்கள் வழங்கி இருப்பது வாழ்க்கையில் நான் பார்க்காத அதிசயம். NCCF நிதி முதலில் 500 கோடி, பின்னர் 300 கோடி நிதியை வாங்கி கொடுத்த பெருமையும் இந்த அரசுக்கு சேரும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.