திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அதில் அவர் கூறியிருப்பதாவது;-
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்ற வருகின்ற நவம்பார் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றிட ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர் 1 ஆகிய சான்றுகளுடன் திருச்சி கண்டோன்மென்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அல்லது நேரில் மாற்றுத்திறனாளிகள் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் ஆவணங்களுடன் வருகை தந்து பயனடையுமாறும், இது தொடர்பான விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431-2412590-ல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.