மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருது

0 703
Stalin trichy visit

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு கீழ்காணும் தமிழக அரசின் மாநில விருதுகள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் சிறந்த பணியாளர் மற்றும் செவித்திறன் குறைந்தோருக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இவ்விருதுகளைப் பெற திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுடைய விண்ணப்பதார்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம், சார்நிலைக்கருவூலம் அருகில், கண்டோன்மென்ட், திருச்சி அவர்களிடமிருந்து நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0431-2412590 வாயிலாகவோ விவரங்களைப் பெற்று வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பித்தினைப் பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.