வீட்டின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை

0 437
Stalin trichy visit

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி ஊராட்சி அலுவலக தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(வயது 54). ஆசிரியர். இவர் தனது மனைவி சுமதியுடன் இருதினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு துறையூரில் இருக்கும் தனது மகளின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை வீடு திரும்பிய சுந்தர்ராஜ், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்க்கையில், பீரோ, பணப்பெட்டகம் ஆகியவை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5000 பணம், வெள்ளிக்குத்துவிளக்கு மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலின் பேரில் போலீசாருடன் விரைந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமார், பெரியமணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கொள்ளை சம்பவம், முசிறி டிஎஸ்பி அருள்மொழி உத்தரவின் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் இரவு ரோந்துப்பணியை முடுக்கி விட்டனர். ஒருமாத இடைவெளிக்குப் பின் மீண்டும் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.