திருச்சி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழா
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 29-ந் தேதி உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நரம்பியல் துறை சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழா நடந்தது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 4 நபர்களில் ஒருவருக்கு அவர் தம் வாழ்நாளில் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக உலக பக்கவாத கூட்டமைப்பு கூறியுள்ளது.
எனவே நாம் பக்கவாதத்தின் அறிகுறிகளை ஆரம்பநிலையிலேயே கண்பிடித்து அதற்குறிய சிகிச்சையை பெறவேண்டும். உலக முழுவதும் ஆண்டுதோறும் ஒன்றரை கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உலகம் முழுவதும் 6 வினாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தினால் உயிர் இழக்க நேரிடுகிறது. அதிக ரத்தக்கொழுப்பு, புகைப்பிடித்தல், சர்க்கரை நோய், இரத்தகொதிப்பு, வயதுமுதிர்வு, இருதயதுடிப்பு தொந்தரவுகள், இருதயவால்வு நோய்கள் மற்றும் உடல் பருமன் காரணமாக இந்த நோய் வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.