திருவெறும்பூர் அருகே லாரி மோதி பெண் பலி!
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள உரத்துறையை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜலட்சுமி(30). இவர் நேற்று திருச்சி திருவெறும்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக திருவெறும்பூரில் காய்கறி வாங்கி விட்டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது துவாக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரிய ஜெயலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜலட்சுமி அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.