திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்குத் தொகுதி மலைக்கோட்டை பகுதியில் 14-வது வட்ட தி.மு.க. சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மளிகை மற்றும் அரிசி வழங்கப்பட்டது. டி.எம்.கருணாநிதி ஏற்பாட்டில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கப்பட்டது.

இதில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட பொருளாளர்
என்.கோவிந்தராஜன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், வட்ட செயலாளர் சிலம்பரசன், பகுதி வட்ட செயலாளர்கள் மற்றும் வட்ட கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.