திருச்சியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

0 560
Stalin trichy visit

திருச்சியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் தனியார் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

கல்லூரி மாணவ,மாணவிகள் நடனம் ஆடியும்,பாட்டு பாடியும்,ஊமை நாடகம் நடத்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் மாணவ,மாணவிகள் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சக்திவேல்,வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.