திருச்சியில் மேளதாளங்கள் முழங்க பூங்கொத்து கொடுத்து தொடக்க பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

0 386
Stalin trichy visit
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன.
பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிக்கூடங்கள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட இருக்கின்றன.34 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர இருக்கின்றனர்.
பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழை பள்ளியில் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதியான இன்று தொடங்குகிறது. திருச்சியில் எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உற்சாகமாய் வருகை புரிந்து வருகின்றனர்.

சுமார் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறந்து உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை உற்சாகமாய் பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
மேளதாளங்கள் முழங்க மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு வெப்பமானி கொண்டு பரிசோதித்து ஆசிரியர்கள் வகுப்பறையில் அனுப்பி வைக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.