60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு

0 319
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த சடையம்பட்டியைச் சேர்ந்தவர் வேலன். விவசாயியான இவர் வளர்த்து வந்த மாடு சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. 20 அடி வரை நீர் இருந்ததால் நீரில் நீந்தியபடி மாடு இருப்பதை அறிந்த அவர்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மாட்டை கயிறு கட்டி மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.