திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி(வயது 32). இவர் சம்பவத்தன்று சிங்காரதோப்பில் இருந்து துவாக்குடி செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். தஞ்சாவூர் சாலை சூலைக்கரை மாரியம்மன் கோவில் பஸ்நிறுத்தத்தில் அவர் இறங்கினார். அப்போது, அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் இருந்த பணப்பையை காணவில்லை.
ஓடும் பஸ்சில் யாரோ மர்ம ஆசாமிகள் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.