செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து பணம், லேப்டாப் திருட்டு

0 500
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூங்கா சாலையில் சிவக்குமார்(வயது 34) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டு விட்டு சென்ற நிலையில் மறுநாள் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் திருடு போயிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உடனே மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.