பஸ் நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடம் தகராறு செய்து தாக்குதல்; வாலிபர் கைது

0 314
Stalin trichy visit

திருச்சி சிந்தாமணி பதுவை நகர் மலர்கொடி ஸ்டோரை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி ரேவதி(வயது 38). இவர் நேற்று அண்ணா சிலை அருகே ஊருக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் அருண்குமார்(23) என்பவர் ரேவதியிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டு கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.