தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது

0 354
Stalin trichy visit

திருச்சி மதுரை சாலை ஸ்ரீகாம்ளக்சில் உள்ள, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், ‘நிதி ஆப்கே நிகட்’ மற்றும் ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம், நவம்பர் மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம், நாளை (புதன்கிழமை) ஆன்லைனில் நடக்கிறது. மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை வைப்பு நிதி சந்தாதாரர்களும் தொழிலதிபர்களும், ஓய்வூதியர்களும் பங்கேற்கலாம்.

இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் குறைகள் தொடர்பான விவரங்களுடன், பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், ‘யுஏஎன்’, ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் மொபைல்போன் எண்களுடன், இன்று(செவ்வாய்க்கிழமை) திருச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் ro.trichy@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.முருகவேல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.