திருச்சியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை!

0 520
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் தொடா்பு கொள்ளும் வகையில் ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம் பாதிப்பு தொடா்பாக இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 93840-56213 என்ற எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பலாம். மக்கள் வசிக்கும் பகுதிகளின் வட்டாட்சியா்களைத் தொடா்பு கொண்டும், TN – Smart என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

 

‘நெல், பருத்தி, மக்காச் சோளத்தை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள ஏதுவாக வரும் 15ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் 24 மணிநேரமும் இயங்கும். மேலும், தகவலுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன் வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும்பட்சத்தில் பயிா் சேதமடைந்தால் பயிா் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.