கொலை வழக்கில் 2 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்

0 668
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் துறையூர் அழகாபுரியை சேர்ந்த பிரதாப்(வயது 30), அரியலூர் வடக்குவீதியை சேர்ந்த சந்துரு(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் இவர்கள் தங்கள் மீதான தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அங்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் பிரதாப், சந்துரு ஆகிய இருவரும் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி செல்வம் உத்தரவின்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.