திருச்சி விமான நிலையத்தில் பவுடர் டப்பாவில் மறைத்து கடத்தப்பட்ட 23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அதில் பயணம் செய்த ஒரு பயணியிடம் 11,16,386 ரூபாய் மதிப்புள்ள 227 கிராம் தங்கமும், மற்றொரு பயணியிடம் 11,50,812 ரூபாய் மதிப்புள்ள 234 கிராம் தங்கமும் புத்திசாலிதனமாக பவுடர் டப்பாவில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த 23 லட்சம் மதிப்பிலான 461 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.