வடுவூர் தென்பாதி கிராம வரைபடம் வரைந்த வேளாண் கல்லூரி மாணவிகள்
கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் மூலமாக வடுவூர் தென்பாதி கிராமத்தில் கிராம வரைபடம் வேளாண் கல்லூரி மாணவிகளால் வரையப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகளால் கிராம வரைபடம் வரையும் நிகழ்வானது வடுவூர் தென்பாதி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் கிராம மக்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வு மாணவர்களுக்கு கிராமப்புற சூழ்நிலை புரிந்து கொள்வதற்கும் கிராம மக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இதில் கிராமத்தின் சமூக வரைபடம் மற்றும் மூன்று வருடத்திற்கான நெல் சாகுபடியினை பட்டை விளக்கப்படம், பிரச்சனைகளுக்கான மர வரைபடம், வென் படம் , மக்கள் தொகை விளக்க வரைபடம் ஆகியவற்றை வரைந்தனர். இதன் மூலம் இக்கிராமத்தின் வளங்கள் மற்றும் பயிர் சாகுபடியில் பிரச்சனைகள் குறித்த தகவல்களை மாணவிகள் சேகரித்தனர்.