பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் குறித்த தகவல் சேகரித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் குறித்த தகவல் சேகரித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.
களப்பயணத்தின் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட களச்சேரி பகுதிக்கு சென்று, அப்பகுதியின் பயிர் உற்பத்தி நிலவரம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தியிடம் மாணவிகள் தகவல்களை கேட்டறிந்தனர்.
இச்சந்திப்பின்போது, அப்பகுதியில் பயிரிடப்படும் தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் வணிகப் பயிர்கள் ஆகியவற்றின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பான தகவல்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.மேலும், முக்கியமாகப் பயிரிடப்படும் பயிர்கள், அவற்றின் உற்பத்தி நிலவரம் மற்றும் அப்பகுதியின் வேளாண் சூழ்நிலை தொடர்பான பயனுள்ள தகவல்களை கிராம நிர்வாக அலுவலர் பகிர்ந்து கொண்டார். இச்சந்திப்பு, களச்சேரி பகுதியின் பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் நிலவரத்தைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.