திருச்சி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் தற்போது 8,50,202 ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல், கள்ளச்சந்தை வணிகம் ஆகியவற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக ரேஷன்கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள்தேவைப்படாத ரேஷன் கார்டுதாரர்கள் தானாக முன்வந்து, “உரிமம் விட்டுக் கொடுத்தல் திட்டத்தின்” கீழ் (Give it up option) www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும், TNEPDS என்ற செயலியிலும், தங்களின் ரேஷன்கார்டில் பதிவு செய்த கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்து, ஒரு முறை கடவுச்சொல்லை பெற்று, எந்த பொருள் எவ்வளவு காலத்திற்கு தங்களுக்கு தேவையில்லை என்பதை “உரிமம் விட்டுக் கொடுத்தலில்” (Give it up option ) பதிவு செய்து, பொதுவிநியோகத்திட்டம் சிறப்பான முறையில் செயல்பட பங்களிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.