இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2022-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2022-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது.
இந்த பணிகளை கண்காணிக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலர் பி.மகேஸ்வரி இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) திருச்சிக்கு வந்து, மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாமை பார்வையிடுகிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை பணிகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் இருந்தால் 044-25674302 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445252243 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது er22maptk@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.