‘மாஸ்டர் பிளான்’ என்ற முழுமை திட்டம் தொடர்பாக பல்வேறு துறை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். கூட்டத்தில், முழுமை திட்ட பகுதிக்குள் அமைந்த உட்கட்டமைப்பு வசதிகளான குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு தேவையான வசதிகள் குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில், முழுமை திட்டம் இறுதியாக்கம் செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார். கூட்டத்தில்மாவட்ட நகர் ஊரக அமைப்பு இணை இயக்குனர் எஸ்.சங்கரமூர்த்தி, உறுப்பினர் செயலர் சிவபாதம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.