திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் உள்ளே உள்ள கார்த்திகை கோபுரம் முன்பாக சொர்க்கப்பனை கொளுத்துவம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இதற்கான முகூர்த்த கால் நடும் விழா ஆலயத்தில் உள்ள கார்த்திகை கோபுரம் முன்பாக தற்போது நடைபெற்றது. கோவில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி புடைசூழ மேளதாளங்கள் முழங்க பிரமாண்ட முகூர்த்த கம்பம் நடப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 8 மணி அளவில் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனை ஓலைகளை கோபுரம் போல் குவித்து அதனை கொளுத்துவதால் தீமைகள் விலகி நன்மைகள் தலைத்தோங்கும் என்பது ஐதீகம்.