மகளிருக்கான பாதுகாப்பு முறைகளில் அரசு தனிக்கவனம் செலுத்த வலியுறுத்தல்

0 365
Stalin trichy visit

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாநில செயலாளர் சுசீலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. சமீபத்தில் நடத்த கோவை பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாணவியின் மரணத்தில் குழப்பங்கள் நிலவி வருவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க அனைத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும். குறிப்பாக ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். மகளிருக்கான உரிய பாதுகாப்பு முறைகளில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.